புனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு அஜித்பவார் உத்தரவு

புனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அஜித்பவார் உத்தரவிட்டார்.

Update: 2023-10-13 20:00 GMT

புனே, 

புனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அஜித்பவார் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

நாந்தெட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 30-ந் தேதி ஒரே நாளில் 17 பச்சிளம் குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதவிர சமீபத்தில் தானே, சம்பாஜிநகர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஒரே நாளில் அதிக நோயாளிகள் உயிரிழந்தனர். மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மருத்துவ சேவை பற்றாக்குறை நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. இந்தநிலையில் துணை முதல்-மந்திரியும், புனே மாவட்ட பொறுப்பு மந்திரியுமான அஜித்பவார் நேற்று புனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார்.

உறுதி செய்ய உத்தரவு

கூட்டத்தில் மண்டல கமிஷனர் சவுரப் ராய், மாவட்ட கலெக்டர் ராஜேஸ் தேஷ்முக், போலீஸ் கமிஷனர் ரிதேஷ்குமார், சசூன் ஆஸ்பத்திரி டீன் ராமச்சந்திர ஹனாகரே மற்றும் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதுமான அளவு மருந்து வினியோகம் செய்யப்படுவதையும், நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அஜித்பவார் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்