தானேயில் 17 லட்சம் தேசிய கொடிகள் வினியோகம்- மாவட்ட கலெக்டர் தகவல்

தானேயில் ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்துக்காக 17 லட்சம் தேசிய கொடிகள் வினியோகம் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் கூறினார்.;

Update:2022-08-07 23:42 IST

மும்பை, 

தானேயில் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்துக்காக 17 லட்சம் தேசிய கொடிகள் வினியோகம் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் கூறினார்.

17 லட்சம் கொடிகள்

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மத்திய அரசு "ஹர் கர் திரங்கா" (வீடுதோறும் தேசிய கொடி) இயக்கத்தை தொடங்கி உள்ளது. சுதந்திர தினத்தின் போது பொது மக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றும் வகையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் கீழ் தானேயில் 17 லட்சம் தேசிய கொடிகள் வீடுதோறும் வினியோகிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

87,500 மாணவர்கள்

இதுகுறித்து தானே மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நா்வேக்கர் கூறுகையில், "தானேயில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 478 வீடுகள் மற்றும் 13 லட்சம் தனியார், அரசு கட்டிடங்கள் உள்ளன. எனவே சுதந்திர தினத்தன்று 17 லட்சம் கட்டிடங்களில் தேசிய கொடியை ஏற்ற உள்ளோம்" என்றார்.

தானேயில் வீடுதோறும் தேசிய கொடி இயக்கத்துக்காக 7 ஆயிரத்து 500 மாணவர்கள் தன்னார்வலராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீட்டில் தேசிய கொடியை ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 80 ஆயிரம் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்