ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தேவேந்திரகுமார் உபாதய் நியமனம்

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தேவேந்திரகுமார் உபாதய் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-07-25 19:00 GMT

மும்பை, 

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தேவேந்திரகுமார் உபாதய் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொலிஜியம் பரிந்துரை

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆ.டி. தகானுகா ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதி நிதின் ஜாம்தார் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார். சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் கடந்த 6-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி தேவேந்திரகுமார் உபாதயை மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், மும்பை ஐகோர்ட்டு நீதிபதி திரஜ் சிங்கை ஆந்திரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும் நியமிக்க பரிந்துரை செய்தது.

தலைமை நீதிபதி நியமனம்

இந்தநிலையில் மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தேவேந்திரகுமார் உபாதயை ஜனாதிபதி நியமித்து உள்ளார். திரஜ் சிங் ஆந்திரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தேவேந்திரகுமார் உபாதய் 1965-ம் ஆண்டு ஜூன் 16-ல் பிறந்தவர். லக்னோ பல்கலைக்கழகத்தில் 1991-ம் ஆண்டு சட்டம் படித்தார். அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் வக்கீலாக இருந்தவர். 2011-ம் ஆண்டு நவம்பரில் அலகாபாத் ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியானார். 2013-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்