துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் 5 நாள் ஜப்பான் பயணம்

துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் 5 நாட்கள் ஜப்பான் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Update: 2023-08-11 18:45 GMT

மும்பை, 

துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் 5 நாட்கள் ஜப்பான் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

5 நாள் பயணம்

மராட்டியம் மற்றும் ஜப்பான் இடையே வணிக, நட்பு ரீதியில் உறவை மேம்படுத்த அந்த நாட்டு அரசு மராட்டிய அரசுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இந்த அழைப்பை ஏற்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வருகிற 20-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு ஜப்பான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த பயணத்தின் போது மராட்டியம் - ஜப்பான் இடையே ஏற்கனவே கையெழுத்தான உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதார திட்டங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் பட்னாவிஸ் ஆலோசனை நடத்த உள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் 2014-2019 வரை முதல்-மந்திரியாக இருந்த போது, மராட்டியத்தில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை ஜப்பான் பங்களிப்புடன் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்