விநாயகர் மண்டல்களில் ஜே.பி. நட்டா சாமி தரிசனம்

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று மும்பையில் உள்ள விநாயகர் மண்டல்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்

Update: 2023-09-26 19:00 GMT

மும்பை, 

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று மும்பை வந்தார். அவர் மும்பையில் உள்ள முக்கிய விநாயகர் மண்டல்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கிர்காவ் பகுதியில் உள்ள கேசவ்ஜி சால் மண்டலில் தாிசனத்தை தொடங்கிய அவர், பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா உள்ளிட்ட மண்டல்களுக்கு சென்றார். அவருடன் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மும்பை தலைவர் ஆஷிஸ் செலார், தேசிய செயலாளர் வினோத் தாவ்டே உள்ளிட்ட தலைவர்களும் சென்றனர். ஜே.பி. நட்டா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் அரசு பங்களாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரையும் தரிசனம் செய்தார். மேலும் தேவேந்திர பட்னாவிசின் சாகர் பங்களாவில் அவர் பா.ஜனதா சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்