பா.ஜனதா சார்பில் 400 இடங்களில் தஹி ஹண்டி

பா.ஜனதா சார்பில் 400 இடங்களில் தஹி ஹண்டி விழா கோலாகலமாக நடந்தது

Update: 2023-09-08 11:49 GMT

மும்பை, 

மும்பையில் நேற்று தஹி ஹண்டி விழா கோலாகலமாக நடந்தது. பெரும்பாலான இடங்களில் அரசியல் கட்சியினர் சார்பில் தான் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக நேற்று பா.ஜனதா சார்பில் சுமார் 400 இடங்களில் தஹி ஹண்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வழக்கமாக சிவசேனா சார்பில் தஹி ஹண்டி விழா நடைபெறும் ஒர்லி ஜம்போரி மைதானத்திலும் பா.ஜனதா சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டும் அந்த மைதானத்தில் பா.ஜனதா சார்பில் நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பா.ஜனதா தங்கள் பலத்தை அதிகரிக்க தஹி ஹண்டி திருவிழாவை அதிக இடங்களில் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் எம்.எல்.ஏ. கூறுகையில், "இந்த ஆண்டு தஹி ஹண்டி கொண்டாட்டம் மும்பையில் மாற்றம் ஏற்பட போவதை காட்டுகிறது. பல இடங்களில் கட்சி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்