யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் கைதான கபில் வாதவனை நாசிக் ஜெயிலுக்கு மாற்ற கோர்ட்டு அனுமதி

யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் கைதான கபில் வாதவனை நாசிக் ஜெயிலுக்கு மாற்ற கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2023-09-03 19:30 GMT

மும்பை, 

யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் கைதான கபில் வாதவனை நாசிக் ஜெயிலுக்கு மாற்ற கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

ஆஸ்பத்திரியில் உறவினர்களுடன் சந்திப்பு

யெஸ் வங்கி முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள டி.எச்.எப்.எல். நிறுவன அதிபர்கள் கபில் வாதவன், தீரஜ் வாதவன் நவிமும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் வாதவன் சகோதரர்கள் குறித்து சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது. அதில் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் போதெல்லாம் 2 பேரும் செல்போன், மடிக்கணினி பயன்படுத்துவதாகவும், உறவினர்களை சந்தித்து பேசுவதாகவும் கூறப்பட்டது.

நாசிக் ஜெயிலுக்கு மாற்றம்

இதையடுத்து கபில் வாதவனை நாசிக் ஜெயிலுக்கு மாற்ற அனுமதி கோரி சிறைத்துறையினர் மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு கபில் வாதவனை நாசிக் ரோடு ஜெயிலுக்கு மாற்ற அனுமதி வழங்கியது. இதுதொடர்பான உத்தரவில், "கபில் வாதவனுக்கு தீவிரமான உடல்நலப்பிரச்சினை இருப்பதாக கோர்ட்டில் ஆவணங்களில் எதுவும் கூறப்படவில்லை. ஆனால் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 15 முறை அவரை ஜெயில் சூப்பிரண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப பரிந்துரை செய்து உள்ளார்" என கூறப்பட்டு இருந்தது. கோர்ட்டு உத்தரவை அடுத்து கபில் வாதவன் உடனடியாக நாசிக் ஜெயிலுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்