6-வது வழித்தடம் அமைக்கும் பணி: 2,700 மின்சார ரெயில்கள் ரத்து - 60 தொலை தூர ரெயில்களும் இயக்கப்படாது

6-வது வழித்தடம் அமைக்கும் பணியையொட்டி 2,700 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிது. 60 தொலை தூர ரெயில்களும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-10 19:45 GMT

மும்பை, 

6-வது வழித்தடம் அமைக்கும் பணியையொட்டி 2,700 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிது. 60 தொலை தூர ரெயில்களும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

6-வது வழித்தடம்

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மும்பை சென்ட்ரல் முதல் தாதர் இடையேயும், பாந்திரா முதல் போரிவிலி வரையிலும் ஏற்கனவே 5 வழித்தடம் உள்ளது. தற்போது 6-வது வழித்தடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக மேற்கு ரெயில்வே தலைமை செய்தி தொடர்பாளர் சுமித் தாக்கூர் கூறியிருப்பதாவது:- கார்ரோடு-கோரேகாவ் இடையே 8.8 கி.மீ. தூரம் வரையில் 6-வது வழித்தடம் அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். இந்த பணிகள் கடந்த 7-ந்தேதி தொடங்கி உள்ளது. தொடர்ச்சியாக 29 நாட்கள் நடைபெற உள்ளது.

ரெயில்கள் ரத்து

இதன் காரணமாக வருகிற 20-ந் தேதிக்கு பிறகு 2 ஆயிரத்து 700 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும். 400 சேவைகளில் பகுதியளவு பாதிப்பு ஏற்படும். இதேபோல 60 தொலை தூர ெரயில்கள் ரத்து செய்யப்படும். 200 தொலை தூர ரெயில்கள் பகுதியளவு பாதிக்கப்படும். இந்த மெகா பிளாக் நன்கு திட்டமிட்டு அமல்படுத்தப்படுகிறது. எனவே முதல் 10 முதல் 13 நாட்கள் வரை எந்த ரெயிலும் ரத்து செய்யப்படாது. 6-வது வழித்தடம் அமைக்கப்பட்டால் மும்பை புறநகர் பகுதியில் கூடுதல் ரெயில் சேவைகள் இயக்கவும், பயணிகள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்