தையல்காரர் கொலை குறித்து கருத்து பதிவு- மும்பை சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த காஷ்மீர் வாலிபர் கைது

நுபுர் சர்மா விவகாரத்தில் தையல்காரர் கொலை குறித்து கருத்து பதிவிட்ட மும்பை சிறுமிக்கு கொலை மிரட்ல் விடுத்த காஷ்மீர் வாலிபர் சிக்கினார்.

Update: 2022-07-12 11:53 GMT

மும்பை, 

நுபுர் சர்மா விவகாரத்தில் தையல்காரர் கொலை குறித்து கருத்து பதிவிட்ட மும்பை சிறுமிக்கு கொலை மிரட்ல் விடுத்த காஷ்மீர் வாலிபர் சிக்கினார்.

கொலை மிரட்டல்

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பா.ஜனதா முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து கூறிய கன்னையா லால் என்ற டெய்லர் கொலை செய்யப்பட்டார். அவரது மரணம் குறித்து மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி முகநூலில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில் சிறுமிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை, பாலியல் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மும்பை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர்.

கைது

விசாரணையில் அவர் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பட்காம் பகுதியை சேர்ந்த பயாஸ் அகமத் பட் (வயது30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பயாஸ் அகமத் பட்டை கைது செய்து மும்பை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கோர்ட்டு அவரை 3 நாட்களுக்கு போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட்டது.


Tags:    

மேலும் செய்திகள்