பள்ளி வேனில் 10-ம் வகுப்பு மாணவி மானபங்கம்; டிரைவர் கைது
பள்ளி வேனில் 10-வகுப்பு மாணவி மானபங்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
பள்ளி வேனில் 10-வகுப்பு மாணவி மானபங்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி வேன்
நவிமும்பை பன்வெல், உசார்லி விலேஜ் பகுதியை சேர்ந்தவர் ரிங்கு குமார் (வயது40). இவர் பள்ளி மாணவர்களுக்கு வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இவர் மாணவர்களை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து சென்றார். எல்லா மாணவர்களையும் வீட்டில் இறக்கிவிட்ட பின் 10-ம் வகுப்பு படிக்கும் 14-வது மாணவி மட்டும் வேனில் தனியாக இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரிங்கு குமார் வேனை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அங்கு அவர் மாணவியை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டுக்கு தாமதமாக வந்தது குறித்து மாணவியிடம் தாய் விசாரித்தார்.
கைது
அப்போது மாணவி தனக்கு நடந்த அவலம் குறித்து தாயிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ரிங்கு சிங்கை கைது செய்தனர்.