2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்-மந்திரி ஷிண்டே காஷ்மீர் சென்றார்

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்ேட காஷ்மீர் புறப்பட்டு சென்றார். 2 நாட்கள் அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Update: 2023-09-17 19:45 GMT

மும்பை, 

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்ேட காஷ்மீர் புறப்பட்டு சென்றார். 2 நாட்கள் அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

காஷ்மீர் பயணம்

மரத்வாடா விடுதலை தினத்தை முன்னிட்டு சத்ரபதி சம்பாஜிநகரில் நேற்று முன்தினம் சிறப்பு மந்திரி சபை கூட்டம் நடந்தது. விடுதலை தினமான நேற்று அங்கு நடந்த நிகழ்ச்சியில் கொடியேற்றி வைத்தார். பின்னர் மதியம் அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார். முதன்மை செயலாளர் பிரிஜேஷ் சிங்கும் அவருடன் பயணித்தார். இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 2 நாட்கள் காஷ்மீரில் கார்கில் பகுதியில் சர்காத் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.

மோடி பிறந்தநாள்

அதன்படி கார்கில் சர்வதேச மராத்தான் போட்டியை அவர் துவங்கி வைக்கிறார். மேலும் அங்குள்ள போர் நினைவு சின்னத்தை பார்வையிடுகிறார். காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் மராத்திய குடும்பங்களை சந்தித்து பேச உள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஹம் சப் ஏக் ஹை'(நாம் அனைவரும் ஒன்று) என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த பயணம் மராட்டியம்- காஷ்மீர் நட்புறவின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்