கோரேகாவ் கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் முதல்-மந்திரி ஷிண்டே சந்திப்பு - குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு

கோரேகாவ் கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசினார். கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

Update: 2023-10-08 18:45 GMT

மும்பை, 

கோரேகாவ் கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசினார். கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு

மும்பை கோரேகாவ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 7 மாடி ஜெய் பவானி எஸ்.ஆர்.ஏ. கட்டிடத்தில் நடந்த பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 60 பேர் காயமடைந்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கட்டிடத்தை வெள்ளிக்கிழமை இரவு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பார்வையிட்டார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏக்நாத் ஷிண்டே, கோரேகாவ் கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

ரூ.50 ஆயிரம் நிவாரணம்

இந்த சந்திப்பின் போது தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர். கட்டிடத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஏக்நாத் ஷிண்டே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதி அளித்தார். மேலும் அவர் தீ விபத்தில் சிக்கிய கட்டிடத்தில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். முன்னதாக தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசு ஏற்கும் என மாநில அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்