சாந்தாகுருஸ்-செம்பூர் இணைப்பு சாலை மேம்பாலம் எல்.பி.எஸ். மார்க் வரையில் நீட்டிப்பு; மாநகராட்சி கமிஷனர் ஒப்புதல்

சாந்தாகுருஸ்-செம்பூர் இணைப்பு சாலை மேம்பாலம் எல்.பி.எஸ். மார்க் வரையில் நீட்டிக்க மாநகராட்சி கமிஷனர் ஒப்புதல் அளித்து உள்ளார்.

Update: 2023-09-13 19:30 GMT

மும்பை, 

சாந்தாகுருஸ்-செம்பூர் இணைப்பு சாலை மேம்பாலம் எல்.பி.எஸ். மார்க் வரையில் நீட்டிக்க மாநகராட்சி கமிஷனர் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இணைப்பு சாலை

மும்பை சாந்தாகுருஸ்-செம்பூர் இடையே இணைப்பு சாலை மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தை எல்.பி.எஸ். மார்க் வரையில் நீட்டித்து காட்கோபர் செல்லும் சாலையுடன் இணைக்குமாறு பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதன்படி மாநகராட்சி தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆய்வு பணியை நடத்தியது. ஆய்வு அறிக்கையை தயாரித்து அந்த குழு மாநகராட்சி கமிஷனரிடம் தாக்கல் செய்தது. இந்த நிலையில் நேற்று கமிஷனர் இக்பால் சாகல் இணைப்பு சாலை மேம்பாலத்தை எல்.பி.எஸ். மார்க் வரையில் நீட்டிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

24 மாதங்களில் நிறைவு

இதற்கான திட்ட செலவு ரூ.36 கோடியே 48 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 24 மாதங்களில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. எல்.பி.எஸ். மார்க் வரையில் மேம்பாலம் அமைக்கப்பட்டால் பி.கே.சி சந்திப்பு, சி.எஸ்.எம்.டி. சந்திப்பு, எல்.பி.எஸ். சந்திப்பு ஆகிய 3 சிக்னல்கள் சந்திப்புகளை வாகன ஓட்டிகள் இலகுவாக கடந்து செல்ல முடியும் எனவும், வடக்கில் இருந்து தெற்கு பகுதிக்கு விரைவாக செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்