மும்பையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.;

Update:2022-06-13 22:58 IST

மும்பை, 

மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

2 நாட்களுக்கு மழை

மும்பையில் கடந்த 11-ந் தேதி பருவ மழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. எனினும்  நகரில் இதுவரை  மழை பெய்யவில்லை. வறண்ட வானிலையே நிலவி வந்தது.

இந்தநிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மும்பையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

பருவ மழை தீவிரம்

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், "அரபிக்கடல், தெற்கு குஜராத், மத்திய மராட்டியத்தின் சில பகுதிகளில் பருவ மழை தீவிரமடைய சாதகமான சூழல் நிலவுகிறது. கொங்கன், கோவா, மரத்வாடா மற்றும் மத்திய மராட்டிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யலாம். மும்பையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகர் மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும்" என்றார்.

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை நகரில் 2.43 மி.மீட்டரும், புறநகரில் 0.53 மி.மீ. மழை மட்டுமே பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்