வீடு இடிந்து விழுந்த விபத்தில் ஒப்பந்ததாரர் உள்பட 4 பேர் மீது வழக்கு

2 மாடி குடிசை வீடு இடிந்து விழுந்த விபத்தில் ஒப்பந்ததாரர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது;

Update:2022-06-10 17:42 IST

மும்பை, 

மும்பை பாந்திரா மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அருகே மகாராஷ்டிரா நகர் பகுதியில் 2 மாடி குடிசை வீடு ஒன்று நேற்று  திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 18 பேர் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்து 17 பேர் வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இடிந்து விழுந்த குடிசை வீட்டின் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒப்பந்ததாரர் மூலம் மற்றொரு வீடு இடிக்கப்பட்டது. இதன் காரணமாக குடிசை வீடு இடிந்து விபத்துக்குள்ளானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டெவலப்பர் ரபீக் மண்டேலியா, நசீம் காலியா, ஹைசேன் மாமு மற்றும் ஒப்பந்ததாரர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்