போலீஸ் தடையை மீறி நடன நிகழ்ச்சி நடத்திய 3 பேர் மீது வழக்கு
போலீசாரின் தடையை மீறி நடன நிகழ்ச்சி நடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு;
ராய்காட்,
ராய்காட் மாவட்டம் பன்வெலில் தனியாருக்கு சொந்தமான கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட பிரபல நடனக்கலைஞர் கவுதமி பாட்டீலின் நடன நிகழ்ச்சி நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். போலீசார் இந்த நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால் கேளிக்கை விடுதியில் இரவு 7 மணி முதல் 10 மணி வரையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது போலீசாரின் தடையை மீறி நடன நிகழ்ச்சி நடந்தது. மேலும் இசைக்குழுவினர் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கிகளை விதிமுறைகளை மீறி உபயோகப்படுத்தினர். இது பற்றி போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் போலீசார் நடன நிகழ்ச்சி நடத்திய விடுதி உரிமையாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரமாகாந்த், அங்கித் வர்மா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.