முதல்-மந்திரி ஷிண்டேவின் தசரா பொதுக்கூட்டத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு உத்தரவு

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் தசரா பொதுக்கூட்டத்துக்கு எதிரான வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

Update: 2023-09-06 20:00 GMT

மும்பை, 

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பிறகு அவரது தலைமையில் கடந்த ஆண்டு (2022) பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் மிகப்பெரிய தசரா பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் தீபக் ஜக்தேவ் என்பவர் இந்த விழா தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர், "பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் நடைபெற்ற முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்தும் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதற்காக அவர்களை பஸ்சில் அழைத்து வருவதற்கு மட்டும் ரூ.10 கோடி செலவிடப்பட்டது. இதற்கான நிதி ஆதாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இருப்பினும் மனுதாரரின் வக்கீல் 2 முறை கோர்ட்டில் ஆஜராகவில்லை. மேலும் கோர்ட்டு உத்தரவின்படி உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. இதை காரணம் காட்டி மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்