நாக்பூரில் மேம்பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த கார் - 5 பேர் படுகாயம்
நாக்பூர் போர்கேடி மேம்பாலத்தில் இருந்து கார் ஒன்று தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.;
நாக்பூர்,
நாக்பூர் போர்கேடி மேம்பாலத்தில் நேற்று காலை 7.30 மணி அளவில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கீழே தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த வழித்தடத்தில் ரெயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த புட்போரி போலீசார் விபத்தில் சிக்கிய காரில் படுகாயத்துடன் கிடந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.