தானேயில் கட்டிடம் இடிந்து விபத்து - 12 குடும்பங்கள் வெளியேற்றம்

தானே காரேகாவ் பகுதியில் சாய் சப்னா என்ற 2 மாடி இடிந்து விழுந்த விபத்து.அதில் வசித்து வந்த 12 குடும்பங்கள் வெளியேற்றம்.

Update: 2023-06-21 19:00 GMT

தானே, 

தானே காரேகாவ் பகுதியில் சாய் சப்னா என்ற 2 மாடி கொண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் 12 குடும்பங்கள் வசித்து வந்தன. நேற்று மதியம் 1.20 மணி அளவில் மொட்டை மாடியில் போடப்பட்டு இருந்த பலகை மற்றும் கட்டிட சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதன் காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. தகவல் அறிந்த மாநகராட்சி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கட்டிடத்தில் வசித்த வந்த 12 குடும்பங்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி என்ஜினீயர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்