பெண் கொலை வழக்கில் ஆண் நண்பருக்கு ஜாமீன் மறுப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆண் நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-07-08 16:42 GMT

மும்பை,

பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆண் நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

2 பேர் கைது

மும்பையை சேர்ந்த பெண் ஜான்வி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு கார் மேற்கு பகுதியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு ஆண் நண்பர் ஜோக்தங்கர் (23), தியா படல்கர் (19) ஆகியோரும் இருந்தனர். அங்கு ஜான்விக்கும், ஜோக்தங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் 2 பேரும் சேர்ந்து ஜான்வியை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தியா படல்கர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கொலையில் அவர் மீது நேரடி ஆதாரம் இல்லாததால் அவருக்கு கோர்ட்டில் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீன் மறுப்பு

சிறையில் இருந்த ஜோக்தங்கர் மீது தடயவியல் சான்றுகள் இருப்பதாக அரசு தரப்பு வக்கீல் தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதி டாங்ரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், ஜோக் தங்கருக்கு எதிராக போதுமான தடயவியல் மற்றும் கொலைக்கான ஆதாரம் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபனை தெரிவித்தார். மேலும் போலீசார் வழங்கிய குற்றப்பத்திரிக்கையும் கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜோக் தங்கர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்