மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீஸ் விசாரணை
மும்பை விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல்
மும்பை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மா்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் விமான நிலையத்தின் டெர்மினல்-2 பகுதியில் நீல நிறப்பையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுபற்றி உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விமான நிலைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
புரளி அம்பலம்
போலீசார் மோப்ப நாயுடன் விமான நிலையத்துக்கு விரைந்தனர். அவர்கள் விமான நிலைய பாதுகாப்பு படையினருடன் இணைந்து விமான நிலையத்தில் சல்லடை போட்டு தேடினர். எனினும் விமான நிலையப்பகுதியில் வெடிப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து வெடி குண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. விமான நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெடி குண்டு மிரட்டல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.