ஒப்பந்த பணியாளர்கள் நியமன விவகாரத்தில் பா.ஜனதா பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; நானா படோலே வலியுறுத்தல்

ஒப்பந்த பணியாளர்கள் நியமன விவகாரத்தில் பா.ஜனதா கட்சி பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நானா படோலே கூறியுள்ளார்.;

Update: 2023-10-21 19:15 GMT

மும்பை, 

ஒப்பந்த பணியாளர்கள் நியமன விவகாரத்தில் பா.ஜனதா கட்சி பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நானா படோலே கூறியுள்ளார்.

ஒப்பந்த பணியாளர்கள் விவகாரம்

மராட்டிய அரசு ஒப்பந்த அடிப்படையில் அரசு பணிகளுக்கு ஆள்சேர்க்க முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கும் உத்தரவை மாநில அரசு ரத்து செய்தது. இந்தநிலையில் ஒப்பந்த அடிப்படையில் அரசு பணிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் முடிவு கடந்த மகாவிகாஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டதாகவும், அதற்காக உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் பா.ஜனதா போராட்டம் நடத்தியது.

மன்னிப்பு கேட்க வேண்டும்

இந்தநிலையில் ஒப்பந்த பணியாளர்கள் விவகாரத்தில் பா.ஜனதா கட்சிதான் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் சேர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " போராட்ட நாடகத்தை பா.ஜனதாவும், பட்னாவிசும் நிறுத்த வேண்டும். அவர்கள் தான் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாருடன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மக்களை திசை திருப்பி வருகிறார் " என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்