பாந்திரா மலைமாதா கோவில் திருவிழா இன்று தொடக்கம்; 287 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பாந்திரா மலைமாதா கோவில் திருவிழா இன்று தொடங்குகிறது. 287 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.;

Update:2023-09-10 01:15 IST

மும்பை, 

பாந்திரா மலைமாதா கோவில் திருவிழா இன்று தொடங்குகிறது. 287 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மலைமாதா ஆலய திருவிழா

மும்பையில் பிரசித்தி பெற்ற பாந்திரா மலைமாதா ஆலய ஆண்டு திருவிழாவில் மாநிலம் முழுவதும் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொள்வதுண்டு. இன்று (ஞாயிற்றுகிழமை) திருவிழா தொடங்குகிறது. வருகிற 17-ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கான திருப்பலி இன்று காலை 10.30 மணி அளவில் கொங்கனி மொழியில் நடக்கிறது. திங்கட்கிழமை காலை 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

75 கேமராக்கள்

இதனை தொடர்ந்து 20-ந் தேதி மராத்தி மொழியிலும், 21-ந்தேதி தமிழ் மொழியிலும், 22-ந்தேதி மலையாளம், 23-ந்தேதி குஜராத்தி, 17-ந்தேதி மீண்டும் மராத்தி மொழியிலும் திருப்பலி நடைபெறும். நேரில் வர முடியாத பக்தர்களுக்கு வசதியாக யூ-டியூப்பில் நேரலை வசதி செய்யப்பட்டு உள்ளது. திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 75 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக பெஸ்ட் குழுமம் சார்பில் 287 சிறப்பு பஸ் சேவைகள் வழங்கப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்