நாளை மறுநாள் முதல் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம்

கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஆட்டோ, டாக்சி டிரைவர் சங்கம் எச்சரித்து உள்ளது.;

Update:2022-09-12 19:44 IST

மும்பை,

கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஆட்டோ, டாக்சி டிரைவர் சங்கம் எச்சரித்து உள்ளது.

ஆட்டோ, டாக்சி வேலை நிறுத்தம்

மும்பையில் சுமார் 50 ஆயிரம் டாக்சி, 2 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்தநிலையில் டாக்சி, ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி நாளை மறுநாள் (15-ந் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மும்பை டாக்சி, ஆட்டோ டிரைவர் சங்கங்கள் எச்சரித்து உள்ளன.

கடந்த சில மாதங்களில் 25 சதவீதம் வரை சி.என்.ஜி. கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளனர்.

கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்

இதுகுறித்து மும்பை டாக்சி டிரைவர் சங்க பொதுச்செயலாளர் ஏ.எல். குவாட்ரோஸ் கூறுகையில், " கட்டணத்தை உயர்த்துவதாக 2 வாரங்களுக்கு முன் எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எங்களது டிரைவர்கள் தினந்தோறும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

குறைந்தபட்ச டாக்சி கட்டணத்தை ரூ.25-ல் இருந்து ரூ.35 ஆக அதிகரிக்க வலியுறுத்துகிறோம். ஆனால் அவர்கள் ரூ.28 அல்லது ரூ.30 என நிர்ணயித்தாலும் எங்களுக்கு சரிதான். எங்களது முக்கிய நோக்கம் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் " என்றார்.

மும்பையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டாக்சி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்