பிறந்த குழந்தையை விற்க முயற்சி- பெண் டாக்டர் உள்பட 5 பேர் கைது

உல்லாஸ் நகரில் பிறந்த குழந்தையை விற்க முயன்ற பெண் டாக்டர் உள்பட 5 பேர் கைது செய்தனர்.;

Update:2023-05-20 20:15 IST

தானே, 

உல்லாஸ் நகரில் பிறந்த குழந்தையை விற்க முயன்ற பெண் டாக்டர் உள்பட 5 பேர் கைது செய்தனர்.

குழந்தையை விற்க முயற்சி

உல்லாஸ்நகரை சேர்ந்த 61 வயதுடைய பெண் டாக்டர் ஒருவர் கைக்குழந்தையை, ஆதரவற்ற தம்பதிக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் போலி வாடிக்கையாளரை அங்கு அனுப்பி விசாரணை நடத்தினர். போலி வாடிக்கையாளரிடம் பிறந்து 20 நாட்கள் ஆன ஆண் குழந்தை இருப்பதாகவும், இந்த குழந்தையை ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு சம்மதித்த போலி வாடிக்கையாளர் கடந்த 17-ந்தேதி பணத்துடன் கிளினிக்கிற்கு சென்றார்.

கைது

டாக்டர் அவரிடம் பணம் வாங்குவதை மறைந்திருந்து கண்காணித்த போலீசார், பெண் டாக்டரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் டாக்டரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அவர் கொடுத்த தகவலின்படி குழந்தையை விற்பனை செய்ய டாக்டருக்கு உடந்தையாக இருந்த நாசிக்கை சேர்ந்த 2 பெண்கள், கர்நாடகா மாநிலம் பெல்காவை சேர்ந்தவர் உள்பட மேலும் 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்