'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்ப மறுத்த வாலிபர் மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்குப்பதிவு

‘ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்ப மறுத்த வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2023-09-30 18:45 GMT

மும்பை, 

'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்ப மறுத்த வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்

மும்பை காந்திவிலி, கிராந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த் அங்குரே (வயது34). இவர் சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார். திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தனர். அவர்கள் வாலிபரை 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்புமாறு கூறினர். ஆனால் வாலிபர் அவர்கள் கூறியபடி கோஷம் எழுப்ப மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் சித்தார்த் அங்குரேவை சரமாரியாக தாக்கியது. இதில் காயமடைந்த வாலிபர் சிகிச்சைக்காக காந்திவிலி அம்பேத்கர் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

4 பேர் மீது வழக்கு

சம்பவம் குறித்து வாலிபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் காந்திவிலி பகுதியை சேர்ந்த 4 பேர் மீது காயம் விளைவித்தல், பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுரேஷ், ரோஷன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் எழுப்ப மறுத்த வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மும்பை காங்கிரஸ், வஞ்சித் பகுஜன் அகாடி கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்