சத்தாரா அருகே கொடூரம்; பழங்குடியின பெண் கூட்டு பலாத்காரம் - பண்ணை வீட்டு உரிமையாளர் சிக்கினார்

சத்தாரா அருகே கூலி வேலைக்கு வந்த இடத்தில் பழங்குடியின பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பண்ணை வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடிவருகின்றனர்.

Update: 2023-07-07 18:45 GMT

புனே, 

சத்தாரா அருகே கூலி வேலைக்கு வந்த இடத்தில் பழங்குடியின பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பண்ணை வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடிவருகின்றனர்.

கூட்டு பலாத்காரம்

ராய்காட் மாவட்டம் சுதாகத் கிராமத்தை சேர்ந்த 26 வயது பழங்குடியின பெண் ஒருவர் சத்தாரா மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் கூலி வேலை செய்வதற்காக தனது கணவன், குழந்தைகளுடன் சென்றார். பண்ணை வீட்டு உரிமையாளர் அங்கிருந்த குடிசையில் இளம்பெண்ணின் குடும்பத்தினரை தங்க வைத்தார். சம்பவத்தன்று அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை கவனித்த பண்ணை வீட்டு உரிமையாளர் குடிசை வீட்டிற்குள் அத்துமீறி சென்றார். அங்கிருந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார். அவருடன் மேலும் 3 பேர் பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தனர்.

உரிமையாளர் கைது

பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை கணவரிடம் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறினார். இதன் பிறகு தம்பதி தனது குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பல்டான் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட பண்ணை வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு கடந்த மாதம் நடந்த குற்ற வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட மற்றவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்