கோவிலில் நகைகள் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

கோவிலில் புகுந்து நகைகள் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-03 23:15 IST

மும்பை, 

கோவிலில் புகுந்து நகைகள் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகைகள் திருட்டு

மும்பை தகிசர் ஆனந்த் நகர் பகுதியில் காளிமாதா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் கும்பல் புகுந்து உள்ளனர். பின்னர் சிலையில் இருந்த தங்க நகைகள், கிரீடம் போன்றவற்றை திருடி கொண்டு தப்பி சென்றனர்.

இது பற்றி போலீசில் கோவில் நிர்வாகி புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு நடத்தி விசாரித்தனர். இதில் 3 பேர் கோவிலில் நுழைந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை வலைவீசி தேடிவந்தனர்.

4 பேர் கைது

இதற்கிடையில் தகிசர் கிழக்கு சம்பாஜி நகர் பகுதியில் திருட்டு நகைகள் விற்க ஆசாமி வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு நடமாடிய ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவரது பெயர் அஜய் சால்கே (வயது19) என்பதும், இவர் தான் தனது கூட்டாளிகளுடன் புகுந்து கோவிலில் கொள்ளை அடித்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், திருட்டு நகைகளை வாங்க வந்த பைசன் சேக் என்பவரையும் கைது செய்தனர். மேலும் அஜய் சால்கே கொடுத்த தகவலின்படி அவரது கூட்டாளிகளான 2 சிறுவர்களையும் பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்