ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி புற்றுநோய் பாதித்த சிறுவன் பலி- 4 பேர் காயம்

ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி புற்றுநோய் பாதித்த சிறுவன் பலியானான். உடன் சென்ற 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-09-14 18:45 GMT

புனே, 

ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி புற்றுநோய் பாதித்த சிறுவன் பலியானான். உடன் சென்ற 4 பேர் காயம் அடைந்தனர்.

புற்றுநோய் பாதித்த சிறுவன்

சாங்கிலியை சேர்ந்த சிறுவன் கிரண்(வயது14). புற்றுநோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள டாடா ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டான். ஆம்புலன்சில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

மும்பை-சத்தாரா நெடுஞ்சாலை கட்ரஜ் குகை அருகே ஆம்புலன்சு வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது மற்றொரு வாகனம் ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

பலி

இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த சிறுவன் கிரண் உள்பட 5 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த பாரதிவித்யா பீட் போலீசார் அங்கு சென்று அவர்களை மீ்ட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் புற்றுநோய் பாதித்த சிறுவன் கிரண் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். காயம் அடைந்த மற்ற 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்