அடுக்குமாடி கட்டிடத்தில் நுழைய வாலிபருக்கு தடை- ஜாமீன் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி

மாற்றுத்திறனாளி சிறுமியை மானபங்கம் செய்ய முயற்சி செய்த வாலிபர், அவர் வீடு அமைந்து உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைய தடை விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-19 16:49 GMT

மும்பை, 

மாற்றுத்திறனாளி சிறுமியை மானபங்கம் செய்ய முயற்சி செய்த வாலிபர், அவர் வீடு அமைந்து உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைய தடை விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வீல்சேர் சிறுமி மானபங்கம்

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறாள். கடந்த மாதம் 5-ந் தேதி சிறுமி அவளது வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்தாள். இதில் சிறுமியுடன் விளையாடி கொண்டு இருந்த தோழி, திடீரென வீட்டுக்குள் சென்றுவிட்டார். இந்த நேரத்தில் அதே குடியிருப்பில் வசிக்கும் 21 வயது வாலிபர் அங்கு வந்து உள்ளார். வாலிபர் தனியாக இருந்த சிறுமியின் வீல்சேரை அவருக்கு அருகில் இழுத்து, சிறுமியை மானபங்கம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. எனினும் சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் அங்கு இருந்து சென்று உள்ளார்.

குடியிருப்புக்குள் செல்லக்கூடாது

இது குறித்து சிறுமி தாயிடம் கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். இதில் வாலிபர் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பாரதி தாங்ரே வாலிபருக்கு ஜாமீன் வழங்கினார். எனினும் வழக்கு விசாரணை முடியும் வரை சிறுமி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்குள் செல்ல கூடாது என அவருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்