7-வது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் நடிகை ராக்கி சாவந்த்; கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகை ராக்கி சாவந்த் 7-வது திருமணத்திற்கு ஒரு மாப்பிள்ளை தேடுகிறார் என்று அவரது கணவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.;

Update: 2023-09-29 20:00 GMT

மும்பை, 

நடிகை ராக்கி சாவந்த் 7-வது திருமணத்திற்கு ஒரு மாப்பிள்ளை தேடுகிறார் என்று அவரது கணவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

நடிகை ராக்கி சாவந்த்

இந்தி திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரான ரித்தேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இவர்களது திருமணம் வாழ்க்கை முறிந்தது. ரித்தேஷ் சிங்கிடம் இருந்து விவாகரத்து பெற்ற ராக்கி சாவந்த் ஆதில் கான் துரானி என்பவரை 2022-ம் ஆண்டே 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ஆதில் கான் மைசூருவை சேர்ந்தவர் ஆவார். அவர் தொழில் விஷயமாக மும்பையில் தங்கி இருந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஆதில் கான் தனக்கு அதிகப்படியான பாலியல் தொல்லை கொடுப்பதாக ராக்கி சாவந்த் குற்றம்சாட்டினார். மேலும் இதுதொடர்பாக ஆதில் கான் மீது போலீசிலும் ராக்கி சாவந்த் புகார் செய்தார். பின்னர் கோர்ட்டிலும் நேரடியாக புகார் செய்தார். அவரது புகாரை கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

கோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே ஆதில் கான் மைசூருவுக்கு வந்து குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதில் கானை கைது செய்தனர். இதையடுத்து ராக்கி சாவந்தும், ஆதில் கானும் பிரிந்தனர். இந்த நிலையில் ஆதில் கான் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அதையடுத்து அவர் மைசூருவுக்கு வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் ராக்கி சாவந்திடம் இருந்து விவாகரத்து கோரி ஆதில் கான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஆதில் கானிடம் இருந்து விவாகரத்து பெற ராக்கி சாவந்த் மறுத்தார். தன்னை ஆதில் கானின் குடும்பத்தினர் மருமகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும், தான் ஆதில் கானுடன் தான் வாழ்வேன் என்று ராக்கி சாவந்த் கூறினார்.

நிர்வாண புகைப்படங்கள்

இந்த நிலையில் ஆதில் கானை சந்திக்க ராக்கி சாவந்த் முடிவு செய்தார். அதற்காக ராக்கி சாவந்த் மைசூருவுக்கு வந்தார். மைசூருவில் உள்ள ஆதில் கானின் வீட்டுக்கும் சென்றார். ஆனால் ராக்கி சாவந்தை ஆதில் கானின் குடும்பத்தினர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஆதில் கான் மீது மீண்டும் ராக்கி சாவந்த் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். ஆதில் கான், தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரூ.4 லட்சத்துக்கு விற்று பணம் சம்பாதித்ததாக ராக்கி சாவந்த் குற்றச்சாட்டு கூறினார். இதற்கிடையே ஆதில் கான் மீது மைசூரு உதயகிரி போலீசில் ராக்கி சாவந்த் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னை ஆதில் கான் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும், அவரது குடும்பத்தினர் தன்னை மருமகளாக ஏற்று வீட்டில் அனுமதிக்க வேண்டும், அதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பணத்துக்காக எதையும் செய்வார்

இந்த நிலையில் ஆதில் கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவருடன் ராக்கி சாவந்தின் நெருங்கிய தோழி ராஜஸ்ரீயும் உடன் இருந்தார். பேட்டியின்போது ஆதில் கான், ராக்கி சாவந்த் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் கூறுகையில், 'நான் ராக்கி சாவந்தின் வாழ்க்கையில் நுழைந்த 6-வது ஆண் மகன். தற்போது ராக்கி சாவந்த் 7-வது திருமணத்துக்காக ஒரு ஆண்மகனை தேடுகிறார். என் மீது ராக்கி சாவந்த் பாலியல் புகார் கொடுத்து எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்புகிறார்' என்றார். பின்னர் ராக்கி சாவந்தின் தோழி ராஜஸ்ரீ கூறுகையில், 'நடிகை ராக்கி சாவந்த் பணத்துக்காக எதையும் செய்வார்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்