கழுத்து அறுத்து கணவரை கொன்ற மனைவி- கள்ளக்காதலனுடன் சிக்கினார்

கணவரின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன், கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-11-23 00:15 IST

மும்பை, 

கணவரின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன், கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

உடல் மீட்பு

நவிமும்பை நியூ பன்வெல் பகுதியை சேர்ந்தவர் பாருக் (வயது22). இவரது மனைவி அஸ்மிரா(22). கடந்த 17-ந்தேதி செக்டர் 18-ம் பகுதி சிட்கோ கார்டன் பகுதியில் பாருக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து அவரது மனைவி அஸ்மிராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்ததால் அவரிடம் போலீசார் கிடுக்குபிடியாக விசாரித்தனர். இதில் அஸ்மிராவிற்கு வங்கதேசத்தை சேர்ந்த சாபிக்குல் அகமது (22) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது தெரியவந்தது.

மனைவி உள்பட 4 பேர் கைது

சாபிக்குல் அகமது சட்டவிரோதமாக மேற்கு வங்காளத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவரை வரவழைத்து கணவரை கொலை செய்து கூட்டாளிகளான தாரிக்குல் மண்டல் (19), கதாபுல் மண்டல் (27) ஆகியோருடன் பாருக்கின் உடலை அகற்றி வீசி சென்றது தெரியவந்தது.

இதனை எதொடர்ந்து போலீசார் அஸ்மிராவை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்படி கள்ளக்காதலன் உள்பட மேலும் 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்