பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்த வாலிபர் - தேடும் பணி தீவிரம்

பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்த வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-09-21 18:45 GMT

மும்பை, 

பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்த வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலில் குதித்த வாலிபர்

மும்பை பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கார் ஒன்று வந்து நின்றது. காரில் இறங்கிய வாலிபர் திடீரென பாலத்தின் மேல் இருந்து கடலில் குதித்து விட்டார். இது பற்றி அறிந்த மும்பை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடலில் குதித்த வாலிபரை மீட்க முடியாமல் போனதால் கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் உதவியை நாடி உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் கடலில் குதித்த வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேடும் பணி தீவிரம்

இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கடலில் குதித்தவர் ஜோகேஸ்வரியை சேர்ந்த வினய் யாதவ் (வயது33) என்பது தெரியவந்தது. அவரது விபரீத முடிவுக்கான காரணம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி 57 வயது நபர் ஒருவர் கடல்வழி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்