அம்பர்நாத்தில் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் நிறுவன அதிகாரி சிக்கினார்

அம்பர்நாத்தில் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-05 19:00 GMT

மும்பை, 

அம்பர்நாத்தில் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மின் நிறுவன உதவி என்ஜினீயர்

கல்யாணில் உள்ள மாநில மின் நிறுவன அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் ஹேமந்த் கோவிந்த்(வயது34). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அம்பர்நாத் பகுதியில் மின் திருட்டு தொடர்பாக ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு வீட்டில் மின் திருட்டு கண்டறியப்பட்டதாக தெரிகிறது. மின் திருட்டு நடந்ததாக கூறப்படும் வீட்டின் உரிமையாளர் மீது அபராத நடவடிக்கை எடுக்காமல் இருக்க, உதவி என்ஜினீயர் ஹேமந்த் கோவிந்த் ரூ.75 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் வாங்கிய போது கைது

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் புகார்தாரர் அம்பர்நாத்தில் உள்ள கல்யாண்-பத்லாப்பூர் ரோடு பகுதியில் உள்ள ராதா கிருஷ்ணா கோவில் அருகில் உதவி என்ஜினீயரை சந்தித்து ரூ.70 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரியை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் லஞ்சம் வாங்கிய உதவி என்ஜினீயர், அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்