உடல்நிலை சரியில்லை என கூறி விநாயகர் சதுர்த்தி கொண்டாட விடுமுறை எடுத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
உடல்நிலை சரியில்லை என கூறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட விடுமுறை எடுத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டர்;
மும்பை,
மும்பை காட்கோபரில் ரெயில்வே போலீசாக பணியாற்றி வருபவர் சஞ்சய் சாவந்த். இவர் கடந்த 14-ந் தேதி முதல் வருகிற 28-ந் தேதி வரை விடுமுறைக்கு விண்ணப்பித்து இருந்தார். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட நேரம் என்பதால் அவரது விடுமுறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி வேலைக்கு வந்த சஞ்சய் சாவந்த், உடல்நிலை சரியில்லை என கூறி விடுப்பு எடுத்து சென்றார். அதன்பிறகு அவர் பணிக்கு வரவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. உயர் அதிகாரிகள், மற்றொரு போலீஸ்காரர் மூலம் சஞ்சய் சாவந்தின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட சொந்த ஊரான கன்காவ்லிக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட உடல் நிலை சரியில்லை என பொய் காரணம் கூறி விடுமுறை எடுத்த ரெயில்வே போலீஸ்காரர் சஞ்சய் சாவந்தை, ெரயில்வே போலீஸ் கமிஷனா் ரவீந்திர சிஸ்வே பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.