தானே அருகே லாரி டிரைவர் அடித்து கொலை

தானே அருகே லாரி டிரைவர் அடித்து கொலை செய்யபட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்;

Update: 2023-09-25 18:45 GMT

தானே, 

தானே மாவட்டம் கல்யாண் டவுனில் உள்ள துர்கடி கோட்டை அருகே நேற்று அதிகாலை 4.40 மணியளவில் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் நவிமும்பையில் வசித்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபக் மஹதோ(வயது25) எனவும், லாரி டிரைவராக இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்