விமான பணிப்பெண்ணை கொலை செய்த பிறகு 2½ மணி நேரம் கட்டிட வளாகத்தில் சுற்றி திரிந்த துப்புரவு தொழிலாளி; விசாரணையில் அதிர்ச்சி தகவல்

அந்தேரியில் விமான பணிப்பெண்ணை கொலை செய்த பிறகு அவரை கொன்ற துப்புரவு தொழிலாளி கட்டிட வளாகத்திலேயே 2½ மணி நேரம் சுற்றி வந்தது தெரியவந்து உள்ளது.

Update: 2023-09-08 11:42 GMT

மும்பை, 

அந்தேரியில் விமான பணிப்பெண்ணை கொலை செய்த பிறகு அவரை கொன்ற துப்புரவு தொழிலாளி கட்டிட வளாகத்திலேயே 2½ மணி நேரம் சுற்றி வந்தது தெரியவந்து உள்ளது.

கத்தி, ரத்தகறை படிந்த ஆடை பறிமுதல்

சத்தீஸ்கரை சேர்ந்த விமான பணிப்பெண் ரூபால் ஒக்ரே (வயது 24) கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அன்று இரவு அந்தேரி மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிட வீட்டில் விமான பணிப்பெண் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் விமான பணிப்பெண்ணை கொலை செய்ததாக அவர் வசித்து வந்த கட்டிடத்தின் துப்புரவு தொழிலாளி விக்ரம் அத்வாலை (வயது40) கைது செய்தனர். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். போலீசார் அவர் கூறிய தகவலின் பேரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 9 அங்குல கத்தியை கட்டிடத்தின் அருகில் உள்ள புதரில் இருந்து மீட்டனர். மேலும் ரத்த கறைபடிந்த ஆடையையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். கத்தி, ஆடையை போலீசார் கலினா தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர்.

2½ மணி நேரம் கட்டிடத்தில்...

இதற்கிடையே விமான பணிப்பெண்ணை கொலை செய்த துப்புரவு தொழிலாளி கட்டிடத்தையே 2½ மணி நேரமாக சுற்றி வந்தது தெரியவந்து உள்ளது. விக்ரம் அத்வால் காலை 10.30 மணியளவில் விமான பணிப்பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார். கொலைக்கு பிறகு அவர் விமான பணிப்பெண்ணின் உடலை குளியல் அறையில் போட்டுவிட்டு, கதவை பூட்டிவிட்டு வெளியே வந்து உள்ளார். விமான பணிப்பெண் கொலை சம்பவத்தின் போது துப்புரவு தொழிலாளியுடன் போராடி உள்ளார். இதன் காரணமாக விக்ரம் அத்வாலின் கை, கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சீருடையில் ரத்த கறை படிந்து உள்ளது. அதை கழுவிய அவர், வேறு உடை அணிந்து எப்போதும் போல கட்டிடத்தில் அன்றாட வேலையை செய்து உள்ளார். ஒவ்வொரு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து இருக்கிறார். கட்டிட காவலாளி உடலில் உள்ள காயங்கள் குறித்து கேட்ட போது, கண்ணாடி உடைந்து காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்தநிலையில் மறுநாள் காலையில், அவர் வழக்கம் போல வேலைக்கு வந்த போது தான் போலீசாரிடம் பிடிப்பட்டுள்ளார். போலீசார் துப்புரவு தொழிலாளியின் உடலில் இருந்த காயங்களை வைத்து தான் அவரை பிடித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்