ரெயில் பேன்ட்ரி காரில் பயணிகள் உணவை எலி தின்ற விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

ரெயில் பேன்ட்ரி காரில் பயணிகள் உணவை எலிகள் தின்ற விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-21 18:45 GMT

மும்பை,

ரெயில் பேன்ட்ரி காரில் பயணிகள் உணவை எலிகள் தின்ற விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவுகளை தின்ற எலி

ரெயில்களில் தரமில்லாத உணவுகள் வழங்கப்படுவதாக பயணிகளிடம் இருந்து அடிக்கடி புகார் எழுந்து வருகின்றன. இந்தநிலையில் மும்பை - கோவா ரெயிலில் உள்ள பேன்ட்ரி காரில் (சமையல் கூட பெட்டி) எலி உணவுப்பொருள்களை தின்னும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் பரவியது. அந்த வீடியோவில் மும்பையில் இருந்த கோவா செல்லும் எல்.டி.டி. - மஜ்காவ் எக்ஸ்பிரஸ் ரெயில் பேன்ட்ரி பெட்டியில் எலிகள் கூட்டமாக அங்கும், இங்கும் ஓடுகின்றன. அந்த எலிகள் பயணிகளுக்கு உணவு தயாரிக்க நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பாத்திரங்களில் உள்ள உணவுப்பொருள்களை தின்கின்றன.

ரூ.25 ஆயிரம் அபராதம்

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. சுகாதாரமின்றி ரெயில் பேன்ட்ரி கார் இருப்பதை கண்டித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் பேன்ட்ரி காரில் உணவுப்பொருட்களை எலி தின்ற விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்தை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் விதித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்