'எனது டிக்கெட், எனது மரியாதை' இயக்கத்தின் கீழ் அந்தேரி ரெயில் நிலையத்தில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் அபராதம் வசூல்

‘எனது டிக்கெட், எனது மரியாதை' இயக்கத்தின் கீழ் அந்தேரி ரெயில் நிலையத்தில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Update: 2023-10-03 20:45 GMT

மும்பை, 

'எனது டிக்கெட், எனது மரியாதை' இயக்கத்தின் கீழ் அந்தேரி ரெயில் நிலையத்தில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

டிக்கெட் சோதனை

'எனது டிக்கெட், எனது மரியாதை' இயக்கத்தின் கீழ் நேற்று அந்தேரி ரெயில் நிலையத்தில் பிரமாண்ட டிக்கெட் பரிசோதனை நடந் தது. பரிசோதனையில் 199 டிக்கெட் பரிசோதகர்கள் ஈடுபட்டனர். டிக்கெட் பரிசோதகர்கள் ரெயில் நிலையத்தின் அனைத்து வாசல் பகுதி, பிளாட்பாரங்களில் நின்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 2 ஆயிரத்து 693 பயணிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்து 77 அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதிகப்பட்ச அபராத தொகை

கடந்த சனிக்கிழமை தாதர் ரெயில் நிலையத்தில் 195 டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்த 1,647 பயணிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 960 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்தேரியில் நேற்று டிக்கெட் எடுக்காத பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம், ஒரே நாளில் ஒரு ரெயில் நிலையத்தில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகும் என ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்