ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
மும்பையை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் விக்ரோலியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு மின்சார ரெயிலில் வந்தார். மாணவி, நண்பர் ஒருவருடன் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். அப்போது வாலிபர் ஒருவர் மாணவியை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.
அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகார் அளித்தார்.
வாலிபர் கைது
அவர் அளித்த புகாரின் பேரில் சயான் வந்தவுடன் போலீசார் மின்சார ரெயிலில் ஏறி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் வடலா பகுதியை சேர்ந்த தொழிலாளி இஸ்ரார் ஹூசேன் (வயது35) என்பது தெரியவந்தது. போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.