திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்;

Update: 2023-10-20 19:45 GMT

தானே, 

மும்ராவை சேர்ந்த 35 வயது வாலிபருக்கு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை பாண்டுப்பை சேர்ந்த 26 வயது பெண்ணின் தொடர்பு கிடைத்தது. இதையடுத்து அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பல தடவை பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தில் பெண் கர்ப்பம் ஆனார். இதையடுத்து அந்த நபர் பெண்ணின் கருவை கலைக்க செய்தார். மேலும் அப்பெண்ணிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்து உள்ளார். இதன்பி்ன்னர் பணத்தை திருப்பி தர மறுத்தார். திருமணத்திற்கு வற்புறுத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டினார். இந்த நிலையில் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த விவகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அப்பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்