தடையை மீறி விசைப்படகில் மீன்பிடித்த 41 பேர் மீது வழக்கு பதிவு

மராட்டியத்தில் தடையை மீறி ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற 41 மீனவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-07-16 20:00 GMT

மும்பை, 

மீன் வளத்தை பெருக்க ஆண்டு தோறும் மீன்பிடி தடைகாலம் விதிக்கப்படுகிறது. இந்த காலங்களில் ஆழ்கடலில் விசைப்படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இந்த நிலையில் மராட்டியத்தில் பல இடங்களில் விதிகளை மீறி சிலர் விசைப்படகில் சென்று் மீன்பிடித்து வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதன்படி நடத்திய விசாரணையில் உரணில் உள்ள கரஞ்சா துறைமுகம், ராய்காட்டில் உள்ள ரேவாஸ், திகோட், போட்னி மற்றும் வரேடி, மும்பை மாகோல் ஆகிய இடங்களில் இருந்து விசைப்படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடித்து வருவது உறுதியானது. இதையடுத்து தடையை மீறிய 41 விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்