மின்னல் தாக்கி 5 பெண்கள் உள்பட 6 பேர் பலி
சந்திராப்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதால் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.;
சந்திராப்பூர்,
சந்திராப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பெண் ஒருவர் காயம் அடைந்தார். இதுகுறித்த தகவல்கள் வருமாறு:-
சிந்தேவாடி தாலுகாவில் உள்ள தேலான்வேதி கிராமத்தில் நேற்று பெண்கள் சிலர் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் 45 மற்றும் 47 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் போபுர்னா தாலுகாவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர். அதேபோல பிரம்மபுரி தாலுகாவில் உள்ள பெட்டலா கிராமத்தில் மின்னல் தாக்கி 35 வயது பெண்ணும், கோர்பா தாலுகாவில் ஒரு விவசாயியும் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மாலை கோண்பிபாரி தாலுகாவில் 35 வயது பெண் ஒருவர் மின்னல் தாக்கியதில் இறந்தார்.