பேலாப்பூர்- பன்வெல் இடையே 5 நாட்கள் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து - மத்திய ரெயில்வே அறிவிப்பு

புதிய சரக்கு வழித்தடம் அமைக்கும் பணியால் பேலாப்பூர்-பன்வெல் இடையே 5 நாட்கள் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

Update: 2023-10-02 18:45 GMT

மும்பை,

புதிய சரக்கு வழித்தடம் அமைக்கும் பணியால் பேலாப்பூர்-பன்வெல் இடையே 5 நாட்கள் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

மெகா பிளாக்

மும்பை துறைமுக வழித்தடத்தில் உள்ள பன்வெல் ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில்வே பணிமனையை சீர்செய்யும் பணிகள் மற்றும் சரக்கு ரெயில் சேவைக்கான 2 புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணி நேற்று இரவு முதல் தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக பேலாப்பூர்-பன்வெல் இடையே இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கூடுதல் பஸ்கள்

இதன் காரணமாக பன்வெலில் இருந்து இரவு 10.58 மணிக்கு சி.எஸ்.எம்.டி நோக்கி கடைசி மின்சார ரெயில் இயக்கப்படும். இதே போல இரவு 10.15 மணி அளவில் தானேக்கு இயக்கப்படும். இதன்பிறகு ரெயில் சேவை மறுநாள் காலை 5.40 மணி அளவில் சி.எஸ்.எம்.டிக்கும், 6.13 மணிக்கு தானேவிற்கும் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. பயணிகளின் சிரமத்தை தவிர்க்க நவிமும்பை மாநகராட்சி சார்பில் பேலாப்பூர்- பன்வெல் இடையே கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்