ராய்காட் பாலி நகராட்சி கவுன்சிலர்கள் 5 பேர் தகுதி நீக்கம்

ராய்காட் பாலி நகராட்சி கவுன்சிலர்கள் 5 பேரை தகுதி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்

Update: 2023-08-08 19:45 GMT

மும்பை, 

ராய்காட் மாவட்டத்தில் உள்ள பாலி நகராட்சி கவுன்சிலர்கள் 5 பேரை தகுதி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலி நகராட்சி தலைவர் தேர்தல் நடந்தது. தேர்தலில் உழவர்-உழைப்பாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த பிரனாலி பாட்டீல் செல்கே போட்டியிட்டார். அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆரிப் மனியாரை விட அதிக ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் 2 சிவசேனா கவுன்சிலர்கள் மற்றும் ஒரு உழவர்-உழைப்பாளர் கட்சி கவுன்சிலர் தங்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி பிரனாலி செல்கேவுக்கு ஓட்டுப்போட்டனர். எனவே தங்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பிரனாலி பாட்டீல் செல்கே, அவருக்கு ஆதரவாக ஓட்டுப்போட்ட கவுன்சிலர்கள் 3 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்த விவகாரத்தில் ஒரு கவுன்சிலரை கலெக்டர் தகுதி நீக்கம் செய்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்