'பெஸ்ட்' பஸ் பயணிகளிடம் செல்போன் அபேஸ் செய்த 5 பேர் கைது; 74 செல்போன்கள் பறிமுதல்

பெஸ்ட் பஸ் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 74 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-08-08 20:00 GMT

மும்பை, 

பெஸ்ட் பஸ் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 74 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

போலீசில் புகார்

மும்பை காந்திவிலி, மலாடு, சார்க்கோப், மால்வாணி போன்ற இடங்களில் செல்லும் பெஸ்ட் பஸ்களில் பயணிப்பவர்களின் செல்போன்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் காந்திவிலிக்கு சென்ற பெஸ்ட் பஸ்சில் செல்போன்கள் திருடியதாக 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது

இவர்கள் பெஸ்ட் பஸ்சில் கூட்டமாக செல்லும் பயணிகளை குறிவைத்து கடந்த 3 மாதமாக செல்போன்களை அபேஸ் செய்து வந்தது தெரியவந்தது. இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 3 பேர் சிக்கினர். அவர்கள் பெயர் சலீம் சேக் (வயது24), அல்டாப் ருபானி (44), சாகப் கான் (43), ரம்ஜான் (51), ஹமித்கான் (42) என தெரியவந்தது. இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 74 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்