முதல்-மந்திரி ஷிண்டே வாட்ஸ்அப் சேனலுக்கு ஒரே நாளில் 40 ஆயிரம் பின்தொடர்பாளர்கள்
முதல்-மந்திரி ஷிண்டேவின் வாட்ஸ்அப் சேனலை ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்
மும்பை,
வாட்ஸ்அப் நிறுவனம் புதிய சிறப்பம்சமாக வாட்ஸ்அப்பில் சேனல் உருவாக்கும் முறையை அறிமுகம் செய்தது. இந்த வாட்ஸ்அப் சேனல் வசதியில், எழுத்து வடிவ தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் அனுப்பும் வசதி உள்ளது. இந்தநிலையில் இந்த வாட்ஸ் அப் சேனலில் கடந்த 19-ந்தேதி மாலை பிரதமர் மோடி கணக்கு தொடங்கினார். இதில் ஒரே நாளில் 10 லட்சம் பேர் இணைந்தனர். இதேபோல மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் புதிய வாட்ஸ்அப் சேனலை தொடங்கினார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 19-தேதி இந்த சேனல் தொடங்கப்பட்டது. தொடங்கிய முதல் நாளிலேயே அதில் 40 ஆயிரம் பின்தொடர்பாளர்கள் இணைந்துள்ளனர். அரசு எடுக்கும் முடிவுகள், திட்டங்கள் கொள்கைகள் பற்றிய துல்லியமான தகவல்களை இந்த வாட்ஸ்அப் சேனல் மூலமாக மக்கள் நேரடியாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.