வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி: பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ. கண்டனம்

வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டதற்கு பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரகார் ஜனசக்தி கட்சி எம்.எல்.ஏ. பச்சு கடு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-08-23 19:15 GMT

மும்பை,

வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டதற்கு பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரகார் ஜனசக்தி கட்சி எம்.எல்.ஏ. பச்சு கடு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கூட்டணி கட்சி எம்.எல்.ஏ. கண்டனம்

மத்திய அரசு வெங்காய விலை உயர்வை கட்டுபடுத்த அதன் ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு மராட்டிய பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்று உள்ள பிரகார் ஜனசக்தி கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பச்சு கடு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வெங்காயத்தின் விலை உயர்ந்தால் பொது மக்கள் பூண்டு, முள்ளங்கியை சாப்பிட முடியும். மத்திய அரசு ஆட்சியை தக்க வைப்பதற்காக பலவீனமாக செயல்படுகிறது. அவர்கள் ஏன் வெங்காய விவசாயிகள் பற்றி கவலைப்படவில்லை?.

விலைகுறையும் போது...

நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளேன். ஆனாலும் நான் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். விலை உயரும் போது அரசு தலையிடுகிறது. அதே நேரத்தில் விலை அதலபாதாளத்துக்கு செல்லும் போது அவர்கள் ஏன் தலையிடுவதில்லை?. வெங்காயம் சாப்பிடாமல் யாராவது ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்களா?. வெங்காய விலை உயர்வை ஊடகங்கள் தேவையில்லாமல் பெரிதுபடுத்துகின்றன. மத்திய அரசு அக்டோபர்-நவம்பருக்கு தேவையான வெங்காயத்தை இருப்பு வைக்க விரும்புகிறது. வாஜ்பாய் அரசு வெங்காய விலை உயர்வால் வீழ்ந்ததை மறக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்