மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது; துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள்
மும்பை விமான நிலையத்தில் ரூ.2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள் ஆவர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் ரூ.2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள் ஆவர்.
ரூ.1¾ கோடி தங்கம்
துபாயில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு சம்பவத்தன்று விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு குடும்பத்தினரிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள தங்க கட்டி மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1¾ கோடி ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்க கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.
துபாய்க்கு சுற்றுலா
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் நவிமும்பை, வாஷி பகுதியை சேர்ந்த ஈஸ்வர் ரமேஷ், அவரது உறவினர்கள் சவான் வேல்ஜி, ஷியாம் ரமேஷ், குணால் பாலாசாகேப் என்பது தெரியவந்தது. 4 பேரும் துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்தவர்கள் என கூறப்படுகிறது. தங்கத்துடன் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சுங்க அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.