பெண்டி பஜாரில் இஸ்ரேல் நாட்டு தேசிய கொடியை அவமதித்த 4 பேர் கைது

பெண்டி பஜாரில் இஸ்ரேல் நாட்டு தேசிய கொடியை அவமதித்ததாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்

Update: 2023-10-19 19:00 GMT

மும்பை,

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இஸ்ரேல் நாட்டு தேசியகொடியை அவமதித்த சம்பவம் மும்பையில் நடந்தது. மும்பை பெண்டி பஜார் சந்திப்பு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த நாட்டு தேசிய கொடியை ஒரு கும்பலினர் சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. தகவல் அறிந்த ஜே.ஜே. போலீசார் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இஸ்ரேல் நாட்டு தேசிய கொடியை சேதப்படுத்திய 4 பேரின் அடையாளம் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான எந்தவொரு ஆட்சேபனைக்குரிய பதிவுகள், வீடியோக்களை மும்பை போலீஸ் கண்காணித்து வருகிறது. இந்த விவகாரத்தில் யாரேனும் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்